Trending News

ஆசிய விளையாட்டு விழா – இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் இந்துனில் ஹேரத்

(UTV|COLOMBO)-18வது ஆசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டியின் ஆடவர் பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இலங்கை வீரர் இந்துனில் ஹேரத் தகுதி பெற்றுள்ளார்.

இந்தச் சுற்றுக்குத் தெரிவான 8 பேரில், குறுகிய தூரத்தை ஆகக்குறைந்த நேரத்தில் ஓடிமுடித்த மூன்றாவது வீரராக இவரது பெயர் பதிவாகியுள்ளது. இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் தாய்நாட்டிற்கு பதக்கம் பெற்றுக்கொடுப்பது தமது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

45 ஆசிய நாடுகளுடன் நடைபெறுகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டுவிழாவின் ஒன்பதாம் நாள் போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்தும் சீனா முன்னிலை வகிக்கின்றது.

இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளில் சீனா 87 தங்கப்பதங்கங்களுடன் மொத்தம் 192 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் இருப்பதோடு  ஜப்பான் 43 தங்கப்பதங்கங்களுடன் 136 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியா இதுவரையில் 8 தங்கப்பதங்கங்களை பெற்று 41 பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாகிஸ்தான் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் விஜயம்

Mohamed Dilsad

Deadly attack on Methodist church in Pakistan – [VIDEO]

Mohamed Dilsad

Licence for 9mm pistols cancelled

Mohamed Dilsad

Leave a Comment