(UDHAYAM, COLOMBO) – ஒற்றுமையாக செயற்படுமாறு இந்தியா, தமிழ் தேசிய கூட்டமைப்பை வலியுறுத்தி இருக்கிறது.
இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இதன்போது அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினுள்ளும் வெளியிலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான பிளவுகளுக்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் சிரமங்கள் நிலவுகின்றன.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் நேற்றைய சந்திப்பின்போது அரசாங்கம் வழங்கிய பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியது.
இந்த விடயங்கள் தொடர்பில் தாம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஜெய்சங்கர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.