(UDHAYAM, COLOMBO) – களுத்துறை கட்டுக்குறுந்த படகு விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
களுத்துறை நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய மேலும் 26 பேர் பேருவளை மற்றும் களுத்துறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.