Trending News

அரசாங்கத்தை எச்சரித்த தனியார் பேரூந்து சங்கம்…

(UTV|COLOMBO)-அதிகரிக்கப்பட்ட போக்குவரத்து தண்டப்பணத் தொகையை சீர்திருத்தம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பியன்ஜித் இதனைக் குறிப்பிட்டார்.

நேற்று கூடிய நிறைவேற்று சபை குழு கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி இரண்டு வார காலத்திற்குள் தண்டப்பணம் தொகையில் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் 3ஆம் திகதிக்கு பின்னர் தமது சங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…

Mohamed Dilsad

Law banning cigarette sales near schools to be Gazetted on April 7

Mohamed Dilsad

Saudi Ambassador holds cordial talks with Minister Rishad Bathiudeen

Mohamed Dilsad

Leave a Comment