(UDHAYAM, COLOMBO) – வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் கடமை நேரங்களில் மாத்திரம் பணிப்புரியும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
சம்பள முரண்பாடுகளை நீக்காமை, துறையின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சீருடை வழங்காமை மற்றும் ஊக்கத் தொகை பெற்று கொடுக்காமையும் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அனைத்து இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சந்துநுவான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த பிரச்சினைகள் தொடர்பாக வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வனவிலங்கு அதிகாரிகள் சங்கம், எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அர்ப்பணிப்புடன் செய்யும் கடமையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.