(UTV|INDIA)-காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் பெண் இராம் ஹபீப் (31). இவர் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றுள்ளார்.
அதை தொடர்ந்து இவர் ஏர் இண்டியா விமானத்தில் விமானி ஆக அடுத்த மாதம் பொறுப்பு ஏற்கிறார். இதன் மூலம் காஷ்மீரின் முதல் முஸ்லிம் பெண் விமானி என்ற பெருமையை பெறுகிறார்.
இவர் நினைத்தவுடன் விமானி ஆகவில்லை. வனவியல் துறையில் ஆய்வு செய்து பட்டயம் பெற வேண்டும் என்ற குழந்தை பருவ கனவு இவருக்கு இருந்தது. எனவே டேராடூனில் படித்து அதற்கான பட்டம் பெற்றார்.
பின்னர் ஸ்ரீநகரில் உள்ள ஷெரீ காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் விவசாய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பட்டமேற்படிப்பு படித்தார். அதன் பின்னர் அமெரிக்கா சென்று விமான பள்ளியில் சேர்ந்து படித்தார்.
2016-ம் ஆண்டில் விமானி பயிற்சியை முடித்தார். 260 மணி நேரம் விமானம் ஓட்டிய அவர் அமெரிக்கா மற்றும் கனடாவில் வர்த்தக ரீதியிலான விமானம் ஓட்ட லைசென்சு பெற்றார்.
தற்போது அவர் டெல்லியில் வர்த்தக விமானி லைசென்சு பெறுபவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியராக இருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் ‘ஏர் இண்டியா’ விமானி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு முன்பு 2006-ம் ஆண்டில் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சேர்ந்த தான்வி ரெய்னா விமானி ஆனார். இதன் மூலம் காஷ்மீரின் முதல் பெண் விமானி என்ற அந்தஸ்தை பெற்றார்.
காஷ்மீரை சேர்ந்த 50 முஸ்லிம் பெண்கள் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நிறுவன விமானங்களில் பணிப்பெண்களாக உள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]