Trending News

“புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் நோர்டிக் (NORDIC) நாடுகளின் மாதிரியைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!

(UTV|COLOMBO)-ஒப்பிடத்தக்க தேசிய கணக்கியல் மற்றும் கணக்காய்வு கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கைக்கான முயற்சிகளை உலக வங்கி ஆதரிக்கின்ற அதேவேளை, உலகச் சந்தைகளில் எங்கள் முறைசாரா துறையை இணைப்பதற்கு புதிய இலங்கை கணக்காய்வு நியமங்களின் அறிமுக நிகழ்ச்சி ஒரு பாரிய படியாகும் என்று நான் நம்புகிறேன் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பட்டியலிடப்படாத வர்த்தக நிறுவனங்களின் கணக்காய்வு நியமங்களுக்கான வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்ள இலங்கை பட்டய கணக்காளர்கள் அலுவலகத்தில் வைபவரீதியாக இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தெற்காசியாவில் எங்கும் அறிமுகப்படுத்தப்படும் முதன்மையான சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை மீதான வரவு, செலவு கணக்கு முறையின் கணக்காய்வு கட்டமைப்பு இதுவாகும். இது பட்டியலிடப்படாத வர்த்தக நிறுவனங்களின் கணக்காய்வுக்கான கணக்காய்வு நியமங்கள் என அழைக்கப்படுகின்றது. பட்டியலிடப்படாத வர்த்தக நிறுவனங்களின் கணக்காய்வு, பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக நிதி நிறுவனங்களின், பொது பணத்தைக் கையாளும். முன்னோடியான பட்டியலிடப்படாத வர்த்தக நிறுவனங்களின் இலங்கை கணக்கியல் நியமங்களானது, சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளின் மத்தியில் சிக்கலான தன்மை காரணமாக குறைவாக இருப்பதை, இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனம் கண்காணித்து வருகிறது.

சர்வதேச நியமங்கள் கொண்ட உலகளவில் பயன்படுத்தப்படும் இன்றைய கணக்காய்வு மிகவும் விரிவான பலபகுதிகளை உள்ளடக்கியது. எனவே, சிறிய நடுத்தர தொழில்துறையினர் பயன்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்ததால், பட்டியலிடப்படாத வர்த்தக நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றது. இலங்கையின் சிறு வணிகங்களுக்கு எளிமையான பதிப்பு இலங்கை பட்டய கணக்காளர்கள நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

தனித்தனி 60 பக்கங்களைக் கொண்ட புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் அனைத்து நிதி அறிக்கையிடல்களிலிருந்து சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர்களின் சிக்கலான தகவல் சுமையை சுலபமாக்குகிறது. நடைமுறை மற்றும் உண்மையான வாழ்க்கை கட்டமைப்பை வழங்குவதன் மூலம், செலவு- பயன் மூலம் மிகவும் குறைவான தொழில் நுட்பங்களுடன் அணுகுகின்றது. இந்தப் புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் சில நோர்டிக் நாடுகளால் பின்பற்றப்பட்ட ஒத்த கணக்காய்வு கட்டமைப்பை மாதிரியாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் 450 க்கும் மேற்பட்ட கணக்காய்வு நிறுவனங்கள் இப்போதிலிருந்து புதிய கணக்காய்வு நியமங்கள் பயன்படுத்தும் செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும் என இலங்கை நம்புகிறது. தற்போது ஒரு மில்லியன் பதிவுசெய்யப்பட்ட சிறிய நடுத்தர தொழில்துறையினரும் 92000 நிறுவனங்களும் உள்ளன.

வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கையை, தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் அறிமுகப்படுத்தியது என்றார் அமைச்சர்.

-ஊடகப்பிரிவு-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

MoU signed for transplanting kidney and other organs of brain dead patients

Mohamed Dilsad

Arrest warrant on Uduwe Dhammaloka Thera

Mohamed Dilsad

Khuram Shaikh stabbed 40 times with broken bottles

Mohamed Dilsad

Leave a Comment