(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ என்ற எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீ.சு.கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிறிதொரு கட்சியின் விரிவாக்கல் செயற்பாடுகளில் பங்கேற்பதானது யாப்பை மீறும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, முடியுமானால் ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ என்ற எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]