(UDHAYAM, COLOMBO) – IDEX 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கலந்துகொண்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இடம்பெற்றுவரும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தபோதிலும் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நேற்று கலந்துகொண்டார்.
இந்த கண்காட்சி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் ஷேய்க் கலீபா பின் செயேத் அல் நஹ்யான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 19ம் திகதி முதல் 23ம் திகதி வரை அபுதாபி சர்வதேச கண்காட்சி நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெற்றுவரும் இந்த சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடானது பாதுகாப்பு துறையில் அதி நவீன தொழிநுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/02/State_Minister_wijewrdene_att.jpg”]