Trending News

பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பியோடிய இருவர் கைது

(UTV|KURUNEGALA)-குருநாகல் – பீலிகட பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பியோடிய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் சிலரை கைது செய்வதற்காக நேற்றைய தினம் நடத்திய சுற்றிவளைப்பின்போது பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வேனொன்றில் இருந்த சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்ததுடன், அவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த சந்தேகநபர் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தப்பிச்சென்ற மற்றுமொரு சந்தேகநபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி லண்டன் சென்றடைந்தார்…

Mohamed Dilsad

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 673 முறைப்பாடுகள் பதிவு

Mohamed Dilsad

Governors informed to resign

Mohamed Dilsad

Leave a Comment