(UTV|COLOMBO)-சர்வதேச அளவில் எரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற நிலமைக்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாகவும், அந்நிலைமையில் மாற்றம் நிகழும் பட்சத்தில் உரிய நிவாரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச அளவில் எருபொருள் விலை அதிகரிக்கும் போது விலைச் சூத்திரத்திற்கு அமைவாக நாட்டிலும் எருபொருள் விலை அதிகரிக்கும் என்றும், சர்வதேசத்தில் விலை குறையும் போது அதன் பிரதிபலனையும் மக்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]