Trending News

வறட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு

(UDHAYAM, COLOMBO) – வறட்சி காலநிலை காரணமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ளமுடியாமல் போன குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

இந்த நிதியுதவியை வழங்குவதற்கான மாவட்ட செயலாளர்கள் மற்றும் விவசாய அமைச்சின் கீழ் தற்போது மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

மார்ச் மாதம் முதல் 4 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுமெனவும் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் மூலம் ஒரு ஏக்கர் பயிர் நிலத்திற்கு 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்

Mohamed Dilsad

Committee on Privileges to probe calls between Aloysius and COPE members

Mohamed Dilsad

ஆனமாலு ரங்க கொலை : குடு ரொஷானின் சகோதரன் கைது

Mohamed Dilsad

Leave a Comment