Trending News

ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்ட தகுதியில்லாத உணவு-நாய்களுக்கு கூட பொருத்தமானதல்ல

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்வதேச ரீதியாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய சில முந்திரி பருப்பால் இலங்கையின் தேசிய விமான சேவை, சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் உடனான தனது பயணம் ஒன்றின் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சில முந்திரிப்பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முறைப்பாடு செய்துள்ளார்.

அவை நாய்களுக்கு கூட தகுதியானவை அல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். குறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் உள்ள விமான நிறுவனம் மீது ஜனாதிபதி வெளிப்படுத்திய கருத்து பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்த விமான நிறுவனம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது விசேட ஜனாதிபதி விசாரணை பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், இந்த முந்திரிபருப்பில் உள்ள ஆபத்து தொடர்பில் இன்னமும் தெளிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரம் நேபாள தலை நகரம் கத்மாண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இவ்வாறு பொருத்தமற்ற முந்திரி பருப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நான் நேபாளத்தில் இருந்து திரும்பிய போது, விமானத்தில் சில முந்திரி பருப்புகள் வழங்கப்பட்டன. அது மனிதர்களுக்கு அல்லது நாய்களுக்கு கூட பொருத்தமானதல்ல. யார் இவற்றினை அனுமதிக்கின்றார்கள்? என ஜனாதிபதி வினவியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்

Mohamed Dilsad

Happy Chinese New Year celebrations in Colombo

Mohamed Dilsad

Leave a Comment