Trending News

பேருவளை படகு விபத்தில் நால்வர் பலி – விசாரணைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-பேருவளையிலிருந்து கடலுக்கு சென்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காலி கடற்கரையிலிருந்து 30 மைல்கல் தூரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய மேலும் ஒரு மீனவரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கமன்டர் தினேஷ் பண்டார குறிப்பிட்டார்.

குறித்த மீனவர் சிகிச்சைக்காக கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளாகிய படகில் 7 மீனவர்கள் பயணித்துள்ளதுடன், அதில் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Navy’s prior preparation to face floods [VIDEO]

Mohamed Dilsad

Lena Dunham joins Tarantino’s “Hollywood”

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මැතිවරණයට නාම යෝජනා බාර ගැනීම හෙට (04) ඇරඹේ

Editor O

Leave a Comment