Trending News

மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது-கல்வி அமைச்சர்

(UTV|COLOMBO)-தரம் ஒன்றில் பாடசாலை மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறையில் அநீதிகள் இழைக்கப்படுமானால் அதைப்பற்றி அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட தரப்புக்களை கோரியுள்ளார்.

தம்மிடம் கோரப்படும் தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் முறையாகப் பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் கல்வி அதிகாரிகளையும் அதிபர்மாரையும் கேட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதைத் தொடர்ந்து, சகல செயற்பாடுகளையும் உச்ச வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

S.B. Dissanayake appointed as Chief Government Whip

Mohamed Dilsad

அரச அதிபர்களிடம் முன்னாள் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்

Mohamed Dilsad

Lanka IOC revises fuel prices

Mohamed Dilsad

Leave a Comment