Trending News

தனது அணிக்காக தன் அர்ப்பணிப்பு குறித்து வெல்லவராயன் கருத்து

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சிகளை மேலும் அதிகரிக்க அதிகளவு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என மாரியோ வெல்லவராயன் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் மட்டுமன்றி பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தற்போதைய உடற்பயிற்சி பயிற்சியாளருமான வெல்லவராயன் டுபாயில் அமைந்துள்ள ஐசிசி அகடமியில் இடம்பெற்ற பயிற்சி அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“கடந்த 04 வருடங்களாக நாம் நிறைய போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். என்றாலும் எமக்கு இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் போன்று எமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றாலும் கிடைப்பதை நாம் இயன்றளவு சிறப்பாக ஆடுகிறோம். அவ்வாறு அதிகளவு வாய்ப்புகளை தட்ட வேண்டும் என்றால் வீரர்கள் நாம் கூறுவதனை கவனமாக கவனிக்க வேண்டும்.

அதேபோன்று, அணியின் வீரர்களது உடற் தகைமையும் தற்போது முன்னேறியுள்ளது என்றே கூறலாம். எனது கிரிக்கெட் பின்னணியுடன் நான் வீரர் ஒருவரின் உடற்பயிற்சியினைப் போன்றே அவர்களது பந்து வீச்சு முறைமை, பிடியெடுப்பு மற்றும் திறமைகளை வெளிக்கொண்டு வரல் போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்துகிறேன்”

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Joint Opposition prepares for mass rally on Aug. 17

Mohamed Dilsad

இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு பிரதமருக்கு அழைப்பில்லை

Mohamed Dilsad

US condemns attacks against Mosques in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment