(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதே சிறந்த தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த தினத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தந்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதியை விட பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அதற்காக தான் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சீர்திருத்தம் கொண்டிவந்திருப்பினும் தனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என நினைப்பதாகவும் ஆனால் தான் அவ்வாறு போட்டியிடாது வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் அரசியலுக்கு வரவேற்பதாகவும் இருவரும் ஆற்றலும் பிரபலமும் மிக்கவர்கள் எனவும் யார் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் தீர்மானிப்பாளர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் என்பது சினிமா போன்று அல்ல எனவும் இருப்பினும் அவர்கள் இருவரும் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களும் மக்களின் கஷ்டங்களை தெரிந்தவர்களும் என்பதால் அவர்களினால் சாதிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தபடுகின்றமை ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, எனக்கு அது தொடர்பில் தெரியாது எனவும் எங்கள் ஆட்சியில் இது போன்று நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனவும் அந்த முடிவினை அனைத்து மீனவர்கள் ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நேர்காணலின் போது யுத்தம் தொடர்பில் ஊடகவியளார் எழுப்பிய கேள்விக்கு விரிவாக அவர் பதிலளித்திருந்தார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் இலங்கைக்கு ஏற்றுக்கொள்வீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எவராக இருப்பினும் இலங்கைக்கு வரலாம் அது அவர்களின் நாடு எனவும் இந்த விடயம் யாராக இருந்தாலும் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]