Trending News

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது உலக மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(17) ஆரம்பமாகிறது.

குறித்த இந்த மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில், எதிர்வரும் 19ம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

74 நாடுகளைச் சேர்ந்த 101 பாராளுமன்ற உறுப்பினர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், அபிவிருத்தி செயற்பாடுகளின் பங்காளிகளும். இதில் பங்கேற்க உள்ளனர்.

இலங்கையின் தேசிய மதிப்பீட்டுக் கொள்கை இந்த மாநாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது நாட்டின் மதிப்பீட்டு தொடர்பான வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக இருக்குமென பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மேலும், மதிப்பீடு தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் உலக நாடுகள் சிலவற்றில் இலங்கையும் இணைந்து கொள்கிறது. தெற்காசியாவில் அவ்வாறான ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு நாடு இலங்கையாகும் என்று பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘MORA’ moving away from Sri Lanka: heavy rains to reduce

Mohamed Dilsad

Rathana Thero decides to back Gotabhaya

Mohamed Dilsad

Warrant issued against former JMO Ananda Samarasekara

Mohamed Dilsad

Leave a Comment