(UTV|COLOMBO)-தகவல் ஆணைக்குழுவின் உத்தரவுகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த வருடம் முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தகவல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயதிஸ்ஸ ரணசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களில் தகவல் பெற்று கொள்வது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதில் முன்னிலையாகாமை மற்றும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறைவேற்றப்படாமை தொடர்பில் 2 வருட சிறை தண்டனை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மக்கள் ஏதேனும் தேவை கருதி அரச நிறுவனங்களில் தகவல்களை கோரும் சந்தரப்பத்தில் அதனை வழங்காது மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் தகவல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]