Trending News

50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம்…

(UTV|COLOMBO)-நாடு முழுவதும், மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமெனவும், சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் எனவும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் தின செய்தி

Mohamed Dilsad

Committee report on SriLankan Airlines to President today

Mohamed Dilsad

Dutch footballers attacked by rival fans after 4-0 win

Mohamed Dilsad

Leave a Comment