Trending News

2019 ஆம் வருடத்திற்கான பாதீட்டு விவாத நாட்களில் மாற்றம்

(UTV|COLOMBO)-2019 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நவம்பர் மாதம் 8ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட இருந்த போதிலும், அது நவம்பர் மாதம் 05ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம்(17) கூடிய அரச கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் குறித்தம் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் நவம்பர் 08ம் திகதி முன்வைக்கப்பட்டு டிசம்பர் 08ம் திகதி வரையில் குழு நிலை விவாதம் இடம்பெறும் என தீர்மானித்திருந்த போதிலும், குறித்த தினம் போதாததாக தெரிவித்து எதிர்கட்சியினரின் கோரிக்கை விடுத்தமையினை ஆராய்ந்தே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நவம்பர் மாதம் 05ம் திகதி மாலை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளதோடு, பாராளுமன்றம் பிற்பகல் 02.00 மணிக்கு கூடவுள்ளது.

அதன்படி, 26 நாட்களுக்கு வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறவுள்ளது.

அதேவேளை வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பின் விவாதம் நவம்பர் 7ம் திகதி முதல் நவம்பர் மாதம் 14ம் திகதி வரையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இரண்டாம் கட்ட வாசிப்பின் விவாதத்தின் வாக்கெடுப்பு நவம்பர் 14ம் திகதி மாலை 5 மணிக்கு நடாத்தப்படவுள்ளது.

மேலும் வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்திற்கு பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Melissa McCarthy to star in “Margie Claus”

Mohamed Dilsad

குவைட்டில் பணிக்கு சென்ற 26 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு

Mohamed Dilsad

பேரூந்து விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment