Trending News

1000 பெண்களை துஸ்பிரயோகம் செய்த மருத்துவர்! உடந்தையான காதலி…

(UTV|AMERICA)-அமெரிக்காவில் 1000 பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த எலும்பு மருத்துவர் காதலியுடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த எலும்பு முறிவு மருத்துவர் Grant William Robicheaux (38). இவர் அமெரிக்காவின் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். இவருக்கு 32 வயதில் Cerissa Laura Riley என்ற காதலி உள்ளார்.

மது பிரியர்களான இருவரும் அதிகமான பார்களுக்கு செல்லும் பழக்கம் உள்ளவர்கள். அங்கு வரும் அழகிய பெண்களிடம் பேச்சின் மூலம் வசியம் செய்து, போதை பொருட்களை கொடுத்து மயக்கி கற்பழிப்பதையே William வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்தக்கொடூரமான சம்பவத்திற்கு அவருடைய காதலி Cerissa உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் பொலிஸாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், குற்றாவளி William செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் 1000க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சிக்கின.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், William மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் புகார் கொடுக்கலாம். அவர்களை பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டனர்.

இதனையடுத்து தற்போது 100-கும் மேற்பட்ட பெண்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lankan shares rise: Post 8th straight weekly gain

Mohamed Dilsad

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள்

Mohamed Dilsad

“A new programme will be implemented to solve problems of people in plantation sector” – President

Mohamed Dilsad

Leave a Comment