Trending News

இன்று நள்ளிரவுடன் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-பேரூந்து கட்டணங்களின் 4 சதவீத அதிகரிப்பு இன்று(20) நள்ளிரவுடன் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

குறைந்த பட்ச பேரூந்து கட்டணமான 12 ரூபாவில் எந்த மாற்றமும் இல்லை எனவும், அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பேரூந்து சேவைகள் மற்றும் அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணங்களிலும் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12 ரூபாய் கட்டணத்திலும், 15 ரூபாய் கட்டணத்திலும் மாற்றம் ஏற்படாது. 19 ரூபாவாக இருந்த பேரூந்து கட்டணம் 20 ரூபாவாகவும், 24 ரூபாவாக இருந்த கட்டணம் 25 ரூபாவாக அதிகரிக்கும்.

மேலும், 28 ரூபாவாக இருந்த கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கும்.

இதேவேளை, தனியார் பேரூந்துகளின் பயணக்கட்டண அதிகரிப்புக்கு அமைவாக, அரச பேரூந்து கட்டணங்களும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

රුපියල් බිලියන 130ක ණයක් ගැනීමට රජයෙන් භාණ්ඩාගාර බිල්පත් වෙන්දේසියක්

Editor O

பஸ் விபத்தில் காயமுற்ற 23 பேர் வைத்தியசாலையில்

Mohamed Dilsad

රටේ ආර්ථිකය ශක්තිමත් කිරීම වෙනුවට, පෙර පැවති ආණ්ඩු විවේචනය කරමින්, වත්මන් ආණ්ඩුව කාලය ගත කිරීම ගැන කණගාටුයි – පාර්ලිමේන්තු මන්ත්‍රී රිෂාඩ් බදියුදීන්

Editor O

Leave a Comment