Trending News

உயிருக்கு உத்தரவாதம் இல்லையென நாமல் எடுத்துள்ள தீர்மானம்

(UTV|COLOMBO)-பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பான தகவல்களை வெளியிட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார தமது பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பான தகவல்களை வெளியிட்டமைக்காக அவர் இரண்டு தடவைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், தமக்கு விசேட காவற்துறை பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்ட போதும், இன்னும் அது கிடைக்கப்பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

வரக்கபொல பொலிஸ் நிலையத்தினால் தனக்கு தொலைபேசி ரோந்து சேவையே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் 06 மணி நேரத்திற்கு ஒருமுறை குறித்த அதிகாரிகள் வீட்டிற்கு வந்து அங்குள்ள புத்தகத்தில் குறித்து விட்டு செல்கிறனர் என தெரிவித்திருந்தார்.

ஆதலால் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாததன் காரணமாக தான் வீட்டில் இருந்து தலைமறைவாகி இருக்க தீர்மானித்துள்ளதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தான் அழைக்கப்படுமாயின் அது குறித்து தனது மனைவிக்கு அறியப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Second stage of A/L paper marking commences today

Mohamed Dilsad

Cloudy skies, showers expected today

Mohamed Dilsad

South Africa, Windies split points after washed-out game

Mohamed Dilsad

Leave a Comment