Trending News

பதுளை சம்பவம்-மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது

(UTV|COLOMBO)-சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு வைத்திசாலைக்கு சென்ற 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவத்தின் சந்தேகநபர் கைதாகியுள்ளார்.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி சுகயீனம் காரணமாக தனது தாயுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன் போது குறித்த மாணவியை பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி கர்ப்பமுற்றுள்ளார் என்று கூறி மாணவியை மகப்பேற்று பிரிவில் அனுமதித்துள்ளனர்.

மகப்பேற்று பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி குழந்தையை பிரசவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது பாட்டியுடன் வசித்து வந்த குறித்த மாணவியை, 23 வயதுடைய திருமணமாகாத குறித்த இளைஞர் ஏமாற்றி இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ජලාශ කිහිපයක වාන් දොරටු විවෘත කරයි

Editor O

பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டுவது தவறா?

Mohamed Dilsad

Showery condition expected to continue – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment