Trending News

ஞானசார தேரர் உச்ச நீதிமன்ற முன்னிலையில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல்

(UTV|COLOMBO)-நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டில் ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்த தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அர்சகுலரத்ன ஊடாக உச்ச நீதிமன்ற முன்னிலையில் விசேட மேன்முறையீட்டு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவினூடாக ஞானசார தேரர், தனது விசேட மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறும் கோரியுள்ளார்.

இதற்கு முன்னரும் ஆறு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைத்த மனு நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Army places buses on standby at SLTB request

Mohamed Dilsad

Showers or thundershowers will occur elsewhere particularly after 2.00p.m

Mohamed Dilsad

கொழும்பில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

Mohamed Dilsad

Leave a Comment