(UDHAYAM, COLOMBO) – குவைட் நாட்டிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 122 இலங்கை பெண்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
குவைட்டிற்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 44 பேரும் மற்றும் சட்டவிரோதமாக அந்நாட்டில் தங்கியிருந்த 78 பேரும் இவ்வாறு இலங்கை வந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.