(UDHAYAM, COLOMBO) – களுத்துறை -கடுகுருந்த கடலில் இடம்பெற்ற படகு விபத்தில் காணாமல் போயிருந்த 23 வயது பெண்ணின் உடல் பேருவளை மருதானை கடற்பரப்பில் இன்று மதியம் கரையொதுங்கியுள்ளது.
இன்று முற்பகல் பேருவளை கலங்கரை விளக்கம் அருகே அவரது கணவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , பின்னர் காணாமல் போயிருந்த ஏழு வயதுடைய சிறுவன் ஒருவரது உடல் பலபிடிய கடற்பரப்பில் கண்டிபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில், இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் காணாமல் போன சிறுமியொருவரை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.