(UDHAYAM, COLOMBO) – காவற்துறை மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை உரிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்த தவறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 25 விடயங்களில் காவற்துறை மறுசீரமைப்பும் ஒன்றாகும்.
இதன் ஊடாக பயங்கரவாத தடை சட்டத்தையும் நீக்குவதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது.
இந்த உறுதிமொழி வழங்கப்பட்டு 18 மாதங்களின் பின்னரும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.