Trending News

இலங்கையின் முதலாவது மாம்பழ உற்பத்தி அபிவிருத்தி வலயம்

(UTV|COLOMBO)-இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம் தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் அமைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

“நாம் உற்பத்தி செய்வோம், நாம் உண்போம்” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தி வலயம் அந்தந்த பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை அடையாளம் கண்டு அதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள மாம்பழ உற்பத்தி வலயம். அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாய அமைச்சு உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தும் விவசாய நவீன திட்டத்தின் கீழ் இந்த மாம்பழ உற்பத்தி வலயம் அமைக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் சிறந்த ரக ஒரு லட்ச மாம்பழக் கன்றுகள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை நோக்கி

Mohamed Dilsad

Trump distances himself from Alabama loss

Mohamed Dilsad

Ex-Dy. Minister Sarath Kumara Guneratne in court today

Mohamed Dilsad

Leave a Comment