Trending News

குறும்படத்தில் நடிக்கும் விஜய் மகன்

(UTV|INDIA)-விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என்று தகவல் வெளியானது.

அதை உண்மையாக்கும் வகையில் சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில் தனது மகன் சஞ்சய்யை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். திரையுலகில் மகனைக் களமிறக்கும் முயற்சி என்று அப்போது அது பேசப்பட்டாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை.

தனது நண்பர்களுடன் இணைந்து தற்போது சஞ்சய் குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தக் குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. ‘ஜங்‌ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் வீடியோ கேம் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Malik Samarawickrama wants people involved with PTL revealed

Mohamed Dilsad

ජල සම්පාදන සේවකයින් වර්ජනයේ

Mohamed Dilsad

பிராசத் ஹெட்டடியாரச்சி மீண்டும் விளக்க மறியலில்

Mohamed Dilsad

Leave a Comment