Trending News

மலேசியா பிரதமரை சந்தித்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகுள் சபையின் 73வது பொதுசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துள்ளார்.

அனைத்து நாடுகளின் தலைவர்களுக்காகவும் ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்த விசேட இரவு விருந்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, அமெரிக்க ஜனாதிபதியினால் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலேசியாவின் பிரதமர் மஹதீர் மொஹமட்டையும் நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போது இலங்கையில் சேறிப் பகுதிகளில் வசிக்கின்றவர்களுக்கான வீடமைப்புத் திட்டம்தொடர்பில் இருவருக்கு இடையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்துக்கு மலேசியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று மலேசிய பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை பணிகள் 2019ல் பூர்த்தி

Mohamed Dilsad

இலங்கை – ஜோர்ஜியா நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் கவனம்

Mohamed Dilsad

SLC gives Malinga green light to play in IPL

Mohamed Dilsad

Leave a Comment