Trending News

இடது கால் வெட்டப்படப்போவதை அறியாமல் சிரித்து கொண்டிருக்கும் சிறுமி…

(UTVBRITANIA)-பிரித்தானியாவை சேர்ந்த மூன்று வயது சிறுமியின் இடது காலை அகற்ற அவர் தாய் கனத்த இதயத்தோடு சம்மதம் தெரிவித்துள்ளார்.

மார்னி டாம்லின்சன் (3) என்ற சிறுமி பிறந்த 13வது வாரத்திலேயே neurofibromatosis என்ற மரபணு நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மார்னியின் கால் நரம்புகள் வளரும் போது அதனுடன் கட்டியும் சேர்ந்து வளரும்.

இதை அகற்றி மார்னியின் கால்களை சரி செய்ய சில முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் அது தோல்வியிலேயே முடிந்தது.

இவ்வளவு வலிகளுக்கு மத்தியிலும் சிறுமி மார்னி சிரித்த முகத்துடனேயே உள்ளார்.

இந்நிலையில் மார்னியின் இடது காலை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்த நிலையில் கனத்த இதயத்தோடு அவரின் தாய் சமீரா சம்மதித்துள்ளார்.

சமீரா கூறுகையில், பொதுவாக மூன்று வயது குழந்தைகள் எப்படியிருப்பார்களோ, அதே போன்ற சாதாரண வாழ்க்கை மார்னிக்கும் கிடைக்கவேண்டும் என்றே இம்முடிவை எடுத்தேன்.

ஏற்கனவே நடந்த அறுவை சிகிச்சையால் அவள் வேதனை அனுபவித்தாள், கடைசியாக நடந்த சிகிச்சையில் நீட்டிக்கப்பட்ட கம்பி ஒன்று மார்னியின் உடைந்த எலும்புக்குள் செருகப்பட்டது.

இப்படி சிரமப்படுவதற்கு ஒரே முறை மார்னியின் காலை அகற்றும் அறுவை சிகிச்சை செய்தால் அவளும் எல்லோரையும் போல சாதாரணமாக இருப்பாள்.

இந்த வயதிலேயே அறுவை சிகிச்சை செய்வது தான் நல்லது, 15 அல்லது 16 வயதுகளில் செய்தால் அதை அவளின் மனம் ஏற்றுகொள்ளாது என கூறியுள்ளார்.

மார்னிக்கு அக்டோபர் மாதம் 11-ஆம் திகதி இடது காலை அகற்றும் அறுவை சிகிச்சை லண்டனில் உள்ள மருத்துவமனையில் நடக்கவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உணவு பொருட்களை பரிசோதிப்பதில் 2000 சுகாதார பரிசோதகர்கள்

Mohamed Dilsad

ICC Confirms Release of Funds to Zimbabwe Cricket

Mohamed Dilsad

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment