Trending News

திருமண அறிவிப்பை வெளியிட பிரபாஸ் தயார்-மணப்பெண் அனுஷ்காவா?

(UTV|INDIA)-பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். அவரது திருமணம்பற்றிய கிசுகிசுக்கள் கடந்த 4 வருடமாக உலா வந்த வண்ணம் உள்ளது. நடிகை அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் காதல். அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்று அவர்களே பேட்டியில் தெரிவித்திருந்தனர். பிரபாஸுக்கு 38 வயது ஆகிறது.

அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. இருவரையும் அவரவர்கள் வீட்டில் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் காதலுக்கு அவர்கள் பச்சை கொடி காட்டியதாக தெரியவில்லை. இருவருக்கும் குடும்பத்தார் வெவ்வேறு வரன் பார்க்கிறார்கள். இதற்கிடையில் படத்தில் இணைந்த பிரபாஸ், அனுஷ்கா ஜோடி வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

பிரபாஸுக்கு வரும் அக்டோபர் 23ம் தேதி பிறந்த நாள். அன்றைய தினம் அவர் தனது திருமணம் பற்றி அறிவிப்பார் என்று பிரபாஸுக்கு நெருக்கமானவர்கள் கூறி உள்ளனர். திருமணம் வேறு பெண்ணுடனா? அல்லது அவருடன் கிசுகிசுக்கப்பட்ட அனுஷ்காவுடனா என்ற கேள்விக்கு அன்று விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாராளுமன்ற மோதல் நிலை-எதிர்வரும் 12ம் திகதி சபாநாயகரிடம்

Mohamed Dilsad

Sakindu and Yameena judo champions

Mohamed Dilsad

ஊடகவியலாளர் மஹேஸ் நிஷ்சங்க விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment