(UTV|COLOMBO)-இலங்கையில் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்க பிராந்திய மாநாடு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், பௌத்த இஸ்லாமிய இந்து மத பெரியார்களின் பங்குபற்றுதலுடன், அம்பாறை மொண்டி ஹோட்டலில் நேற்று காலை (01) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விஷேடமாகப் பங்கேற்று, இன நல்லிணக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும்
வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, இந்த மாநாட்டில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றமை விஷேட அம்சமாகும்.
அமைச்சர்காளன ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன், ஹலீம், பௌசி மற்றும் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, மன்சூர், அலிசாஹிர் மௌலான, எஸ்.எம்.எம்.இஸ்மாயில், நஸீர் ஆகியோரும் பங்கேற்றிருந்ததோடு, தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தினர்.
ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி, அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி ஆதம்பாவா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
அத்துடன் வேடுவ சமூகத்தின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
“அம்பாறையில் ஏற்பட்டிருக்கும் காணிப் பிரச்சினையால் சமூகங்களுக்கிடையே நல்லுறவு சீர்குலைந்துள்ளது” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டியதுடன், இதற்கென விஷேட குழுவொன்றை நியமித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான மோசமான வன்முறைகளை அடுத்தே, இவ்வாறான தேசிய நல்லிணக்க முயற்சி சபாநாயாகர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, முதலாவது பிராந்திய மாநாடு கண்டியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-ஊடகப்பிரிவு-
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]