Trending News

கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் 11 அணைகள் திறப்பு

(UTV|INDIA)-கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவானது. தற்போது அதன் பாதிப்பில் இருந்து கேரளா மீண்டு வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கன மழை பெய்து வருகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு முதல் மாலத்தீவு வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கிறது.

இந்த மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். தொடர்ந்து 36 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே கேரளாவில் உள்ள அணைகளில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 11 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்களுக்கு

Mohamed Dilsad

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள்

Mohamed Dilsad

கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை…

Mohamed Dilsad

Leave a Comment