Trending News

இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை

(UTV|COLOMBO)-கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதில்லை என்பதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.

அரசியல் தேவைகளுக்காக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நாட்டின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்து கண்டிக்கப்பட வேண்டியது.

கிரிக்கெட் வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமைக்கான எந்தவொரு சாட்சியங்களோ, ஆதாரங்களோ சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கோ, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கோ கிடைக்கவில்லை.

அல் ஜசீரா தொலைக்காட்சி போர் இடம்பெற்ற காலத்திலும் இவ்வாறு நாடு மீது சேறு பூசியது. அதேபோன்று தற்பொழுது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் முன்னாள் வீரர்களான அர்ஜூன ரணதுங்க, அரவிந்த டி சில்வா ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக திலங்க சுமதிபால குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உயர்தர தனியார் பரீட்சார்த்திகள் – ப.தி. இணையத்தளத்தை பார்வையிட அறிவுறுத்தல்

Mohamed Dilsad

Harsha discusses bilateral trade with UK Minister

Mohamed Dilsad

Rain in several areas today

Mohamed Dilsad

Leave a Comment