Trending News

பல்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத போதை பொருள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கல்கிஸ்ஸ கல்தேமுல்லை பகுதியில் 20 கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்மீமன கெசல்கஸ்ஹேன பகுதியில் 10 கிராம் ஹெரோயினுடன் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் – வீதியவத்தை பகுதியில் 3 கிராம் ஹெரோயினுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

මිල්ලනියේ කර්මාන්තශාලාවක ගින්නක්

Editor O

மின்னேரியா தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக பூட்டு

Mohamed Dilsad

Facebook being investigated by US Federal Trade Commission

Mohamed Dilsad

Leave a Comment