(UTV|COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் அபிவிருத்தியில் பொற்காலம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மருதானையில் நேற்று(13) இரவு நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் இறுதி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.