(UTV|COLOMBO) – இந்த நாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பார் என்ற காரணத்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் நவ சின்ஹல ராவய அமைப்பை தாம் கலைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் மாக்கல் கந்தே சுதந்த தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இந்த நாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழிநடாத்துவார் என்ற காரணத்தால் எதிர்வரும் பொது தேர்தலுக்கு பின்னர் பொதுபல சேனா அமைப்பபை தாம் கலைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று அறிவித்திருந்தார்.