(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறன்று(08) இடம்பெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்திருந்தார்.
அவரது உடல் சிங்கபூரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு (04) 9 மணியளவில் வந்தடைந்த யு.எல். 309 என்ற விமானத்தில் கொண்டுவரப்பட்டது.
அவரது பூதவுடலை அமைச்சர்களான பந்துல குணவர்தன, டலஸ் அழகபெரும தலைமையிலான குழுவினர் பொறுப்பேற்றனர்.