(UTV|COLOMBO) – வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு அவரது துப்பாக்கியை இனந்தெரியாத நபர் ஒருவர், இன்று(25) பறித்துச் சென்றுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த இராணுவ சிப்பாய் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.